மாதவப்பாட்டு
Tuesday, June 5, 2012
மனமொழி வெண்பா - 1
ஈதென்ன மானிட இப்பழக்கம் எவ்விதம்
சூதென்ன சூழ்ந்ததோ சூத்திரமோ - தீதென்ன
நன்றென்ன தேராயோ நற்பச்சை மாமலைக்
குன்றன்ன மேனியனைக் கூறு .
ஆழியோன் வாழி
ஆழியிலே அணையென அரவத்தைக் கொண்டவா
தூளியிலே ஆடையிலே துட்டர்களை வென்றவா
தாழியுறு வெண்ணெய் தாயறியா துண்டவா
வாழியவே வாழியவே வளமார் பல்லாண்டே
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)